மிளகின் மருத்துவ நன்மைகள் ஏராளம் !
மிளகின் மருத்துவ குணங்கள்:
கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள்
தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய உயிர் சத்துக்கள் மிளகில் நிறைந்துள்ளது.
“பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டிலயும் சாப்பிடலாம்னு” சொல்லுவாங்க…!
அந்த அளவுக்கு விஷத்தை முறிக்கக்கூடிய தன்மை மிளகிற்கு உண்டு. அது விஷத்தை முறிப்பதாகவும், வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் இருக்கிறது. பசியின்மை, செரியாமை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்தாக கருதப்படுகிறது. திரிதோஷம் எனப்படும் வாதம்-பித்தம்-கபம் தொடர்பான பிரச்சனைகளுக்கு திரிகடுகு (சுக்கு-மிளகு-திப்பிலி) சூரணத்த தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். திரிகடுகு சூரணம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக இருக்கிறது.
சாதாரண காய்ச்சலுக்கு மிளகு கசாயம் நல்ல மருந்தாக இருக்கும்; சளி இருமல் இருந்தால் மிளகு கசாயத்தோட பனைச் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
தினமும் பல் தேய்க்கும்போது மிளகுடன் உப்பு சேர்த்து தொடர்ந்து தேய்த்து வந்தால் பல் கூச்சம், பல்வலி, வாய் துர்நாற்றம் எல்லாம் நீங்கி பல் வெண்மையாகும்.
தினசரி மிளகு பொடி 1/2 கிராம் வெதுவெதுப்பான நீரில் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரை பெருக்கி உணவை செரிக்க உதவும்.
மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து, 1 கிராம் இருவேளை வெந்நீரில் எடுத்துவர செரியாமை நீங்கி, வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும்.
ஜலதோஷத்தால் வந்த இருமல் நீங்க மிளகு கஷாயத்தில் பனை சர்க்கரை சேர்த்து குடித்து வர வேண்டும்.
உடல் நச்சுத்தன்மை நீங்க அல்லது விஷக்கடி நஞ்சுகள் நீங்க மிளகு 10, வெற்றிலை 1, அருகம்புல் 1 கைப்பிடி நசுக்கி போட்டு குடிநீரிட்டு கஷாயம் வைத்து குடித்து வரவும்.
மிளகு இரசம் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும். மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்யும்.
மிளகு பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்துவர ஞாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் நீங்கும்.