மருத்துவ குணம் நிறைந்த தூதுவளை !
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் மூலிகையாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு.
சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.
மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புத மூலிகையான தூதுவளை பல நோய்களுக்கும் தீர்வாக உள்ளது.
இதன் மருத்துவ பயன்களை பார்ப்போம்:
தூதுவளையில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இதனால் பற்கள், எலும்புகள் வலுவடையும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தேனுடன் கலந்து காலை, மாலை என இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட இருமல் நீங்கும்.
பாம்பின் விஷத்தைமுறிக்கும். நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும். உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.
ஜீரணசக்தியை தூண்டும். தாதுவை பலப்படுத்தும். தூதுவளைக் கீரை ஆண்மை குறைவை தடுக்கும்.உடலும் வலுபெறும்.
சளி,இருமல்,ஜலதோஷம் போன்ற நுரையீரல் சார்ந்த நோய்களுக்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து.வாரம் ஒருமுறை தூதுவளைக் கீரை சாப்பிட்டு வந்தால் மூச்சுப்பாதையில் ஏற்படும் தொற்றுகள் நீங்கும்.
தூதுவளை வத்தல் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் கண் தொடர்பான நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.
தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.
தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.
சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.
ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும். தூதுவளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும்.
தூதுவளை பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
தூதுவளை கீரையை நெய்யுடன் சேர்த்து வதக்கி துவரம் பருப்பு, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து கடைந்தும் சாப்பிடலாம்.