மருத்துவமனையாக மாறும் கருணாநிதியின் இல்லம் – கலைஞரின் இறுதி ஆசை
கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது கோபாலபுரத்தின் இல்லம் மருத்துவமனையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கருணாநிதியின் 86 வது பிறந்தநாளான கடந்த 2010ல் கொண்டாடிய போது அறிவுப்பு ஒன்று வெளியானது. அதில் அவர் கூறியிருப்பது தனது மறைவு மற்றும் தன் மனைவியின் மறைவுக்கு பின் ஏழைகளுக்காக தனது கோபாலபுரத்தில் இல்லத்தை இலவச மருத்துவமனையாக மாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதற்காக அவர் தனது கோபாலபுரம் இல்லத்தை அன்னை அஞ்சுகம்மாள் அறக்கட்டளைக்கு தானமாக கொடுத்துள்ளார். இதன் மூலம் அவரது செயல் ஏழைகளின் மீது அவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில் அவரது மறைவு பெரும் வேதனையை அளித்தபோதிலும் , அவரின் ஏழைகள் மீது உள்ள பற்று மிகவும் பாராட்டுக்குரியது. எனவே கோபாலபுரத்தில் இல்லம் அவரது மனைவியின் மறைவுக்கு பின்னர் ஏழைகளுக்கான இலவச மருத்துவமனையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது