போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிக வாபஸ் – தொழிற்சங்கங்கள் முடிவு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர். தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் 22, 29, 31-ஆம் தேதிகளில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. போக்குவரத்து தொழிற் சங்கங்களுடனான இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அண்மையில் 20 சதவீத போனஸ் 5 ஆயிரம் முன்பணத் தொகை மற்றும் முதற்கட்டமாக 258 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.
நிலுவைத் தொகையை உயர்த்தி வழங்குதல், ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணி மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி பல்லவன் இல்லம் முன் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை ஒத்திவைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.