பேராசிரியர் பணியில் இருந்த நான் மாணவிகளை தவறான பாலியல் தொழிலுக்கு அழைத்தேன்- நிர்மலாதேவி ஒப்புதல் வாக்குமூலம்….
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியது உண்மை என்று நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நிர்மலாதேவியின் வயது 46. இவர் தேவாங்கர் கலைக் கல்லூரியில் இளங்கலை முதுகலை படிப்பும், காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற புகாரில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்புசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர் இரண்டாம் ஆண்டு பயிலும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக வற்புறுத்தி பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் 4 மாணவிகளும் புகார் அளித்தனர். முதலில் கல்லூரி நிர்வாகம் நிர்மலாதேவியை பணிஇடைநீக்கம் செய்தது. இதனை தொடர்ந்து ஒருவாரம் கழித்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. சிபிசிஐடி கூடுதல் அதிகாரி எஸ்.பி லாவண்யா வழக்கு தொடர்பான தனது விசாரணை அறிக்கையை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பாதிக்கபபட்ட மாணவிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிர்மலா தேவியின் உரையாடல்களை சிடிகளாக மாற்றியுள்ளதாகவும் 160 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஆய்வு மாணவர் கருப்பசாமி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக நிர்மலா தேவி ஒப்புகொண்டார். முருகன் மற்றும் கருப்பசாமிக்காகவே மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.