பேபி கார்ன் மிளகு ஃப்ரை
தேவையான பொருட்கள்:
பேபி கார்ன்- 10-12
வெங்காயம் -1 கப்
பூண்டு – 6 துண்டு துண்டாக வெட்டப்பட்டது
மிளகாய் தூள் -1/2 தேக்கரண்டி
மிளகு தூள் சுவைக்கேற்ப
உப்பு தேவையான அளவு
எண்ணெய் -3 தேக்கரண்டி
கடுகு
கறிவேப்பிலை
தயாரிப்பு முறை:
பேபி கார்னை சுத்தப்படுத்தி, அதை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். பேபி கார்னை தண்ணீருடன் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி பேபி கார்னை எடுத்து வைத்து கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு தயாராக வைத்துக்கொள்ளவும்.
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலைகளை சேர்க்கவும்.
பிறகு வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் கண்ணாடி ஆகும் வரை வதக்கவும்.
இதனுடன் வேக வைத்துள்ள பேபி கார்ன், மிளகாய் தூள், மிளகு தூள், மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
மிதமான தீயில் 5-10 நிமிடம் மசாலா பேபி கார்னுடன் நன்றாக சேர்ந்ததும் இறக்கி பரிமாறலாம். இதனை ப்ரெய்டு ரைசுடன் பரிமாறி சாப்பிடலாம்.