பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
கள்ள காதலனுக்காக தான் பெற்ற குழந்தைகளையே பாலில் விஷம் வைத்து கொன்ற கொடூர தாய் அபிராமி தற்போது புழல் சிறையில் யாரிடமும் பேசுவதில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
சென்னை அருகே உள்ள குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய் (30), இவர் தனியார் வங்கியில் ஒரு முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார், இவருடைய மனைவி அபிராமி (25), இவர்களுக்கு அஜய் என்ற மகனும், கர்னிகா என்ற மகளும் உள்ளனர்.
சில முக்கிய வேலை காரணமாக விஜய்யால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டுக்கு வர முடியவில்லை. இந்நிலையில் அடுத்த நாள் வீடு திரும்பிய விஜய் தன் இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
அப்போது நடைபெற்ற முதற்கட்ட விசாரணையுள் தாய் அபிராமி பிரியாணி கடையில் வேலைபார்க்கும் சுந்தர் என்பவரிடம் காதல் கொண்டுள்ளதாகவும், அதனால் கணவன் – மனைவி இடையே சமீப காலமாக மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இந்நிலையில் கள்ள காதலனுக்காக பெற்ற குழந்தைகளையே பாலில் விஷம் வைத்து அபிராமி கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தலைமறவாக இருந்த சுந்தர் மற்றும் அபிராமியை காவல்துறையினர் கைது செய்த்தனர்.
இப்போது அபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அபிராமி அங்கிருக்கும் யாரிடமும் பேசுவதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவள் எந்த நேரமும் அழுதுகொண்டே இருப்பதாகவும் , யாரிடமும் பேசுவதில்லை என்றும் கூறப்படுகின்றது.