பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொடும் – சந்திரபாபு நாயுடு
பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. லிட்டர் ஒன்றிற்கு ரூ.83-ஐ நெருங்கியுள்ள நிலையில், பெட்ரோல் விலை விரைவில் ரூ.100-ஐ தொடும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மக்களின் பலத்தையே காட்டுகிறது.
இது தேசிய ஜனநாயக கூட்டணியின் சாதனை அல்ல. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெட்ரோல் விலை விரைவில் லிட்டருக்கு 100 ரூபாயை எட்டும் என்றும் அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சரிவை சந்தித்துள்ளது.
இதேபோல, அமெரிக்க பங்கு சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயாக சரிவடையும் என்று சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.