பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம்; பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல்.
மூத்த பத்திரிக்கையாளரும், பிரபல எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டில்லியில் நேற்று முன்தினம் காலமானார். அவர் டெல்லியில் உள்ள எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களுக்கு சேர்க்கப்பட்டார்.உடல் நல குறைவின் காரணமாக அங்கேயே நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு குல்தீப் நய்யாரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 95 ஆகும்.
குல்தீப் நய்யார் பாகிஸ்தானில் பஞ்சாப் அருகே உள்ள சியால்கோட்டில் 1923-ஆம் ஆண்டு பிறந்தவர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவின் போது இந்தியாவில் குடிபெயர்ந்தார். முதலில் குல்தீப் நய்யார் உருது மொழி பத்திரிக்கையாளராக தனது பணியை தொடங்கினார். பின்னர் எழுத்தாளராகவும் , அரசியல் விமர்சகராகவும் பிரபலம் ஆனார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு பத்திரிக்கை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
மூத்த பத்திரிக்கையாளரும், பிரபல எழுத்தாளருமான குல்தீப் நய்யார் மகாத்மா காந்தி , முகமது அலிஜின்னா மன்மோகன்சிங் என பல்வேறு தலைவர்கள் குல்தீப் கேள்விகளுக்கு பதில் அளிக்காதவர்களே இல்லை.கடந்த 70 ஆண்டுகளில் 14 மொழிகளில் 80 பத்திரிக்கைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.இத்தகைய மூத்த பத்திரிக்கையாளருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்..