நேர்மையான காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பே இல்லை ; முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி.
குட்கா ஊழல் வழக்கு தொடர்பான விவகாரத்தில் சிபிஐ ,கிரிமினல்கள் எழுதிய டைரியின் அடிப்படையில் தன் மீது சோதனை நடத்தியுள்ளது மிகவும் வருத்தமாகவுள்ளது.
என் 33 ஆண்டு கால காவல் பணியில் நான் எந்த தவறும் செய்யவில்லை. நேர்மையான அதிகாரியாகத்தான் இருந்தேன்.
இவ்வாறு நேர்மையாக உள்ள அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார்.
தி மு க – வழக்கறிஞ்சர்கள் தனது மனுவின் எந்த இடத்திலும் என் பெயரை குறிப்பிடவில்லை என்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்தார்.
அப்படி இருக்கும் போது போலீஸ் கமிஷனருக்கு லஞ்சம் கொடுத்ததாக குட்கா வியாபாரிகளின் டைரியில் எழுதி இருந்ததன் அடிப்படையில் என் மீது சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த குட்கா வியாபாரிகள் லஞ்சம் கொடுத்ததாக சொன்ன அந்த தேதியில் நான் காவல் ஆணையர் பொறுப்பிலேயே இல்லை என்றும் கூறினார்.
மேலும் குட்கா ஊழல் வழக்கு எப் ஐ ஆர்-ல் தனது பெயரும் குறிப்பிடவில்லை என்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி அளித்தார்.
இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.மேலும் குட்கா கிடங்கு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.