RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதி…
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சி.வி.சண்முகம். தற்போது சட்டத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
45 வயதாகும் இவருக்கு இன்று அதிகாலையில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.