fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இன்று டாஸ்மாக் மீண்டும் திறப்பு!!

Tasmac opened today

சென்னை:

டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்

டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அதன் பின்னர் தமிழகத்தில் மதுபானக் கடைகள் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் கொரோனா பாதிப்புக்குள்ளான இடங்கள் தவிர பிற பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 147 மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. அவற்றில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 13 கடைகள் தவிர்த்து மீதமுள்ள 134 கடைகள் இன்று திறக்கப்பட்டன.

கடலூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடையில் மது வாங்குவதற்காக காலையிலேயே மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நிற்கத் தொடங்கினர்.

காவல் துறையினர் அவர்களை அருகில் உள்ள 2 மைதானங்களில் சமூக இடைவெளிவிட்டு அமரச் செய்தனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில் அவர்களுக்கு இன்று நீலக் கலரில் டோக்கன் வழங்கப்படுகிறது. ஒரு கடைக்கு ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

Tags

Related Articles

Back to top button
Close
Close