RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறிதான் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி தான் ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 17-ந்தேதி, ராஜஸ்தானில் இருந்து வந்த ரெயிலில் 2 ஆயிரத்து 190 கிலோ கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது நாய் இறைச்சி என்று சந்தேகிக்கப்பட்ட்டது. இது சென்னை மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எழும்பூரில் சிக்கியது நாய்க்கறி அல்ல ஆட்டு இறைச்சி என்பது உறுதியாகி உள்ளது. சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.