fbpx
Tamil News

தோப்புக்கரணம் தரும் அதிசய பலன்கள் !

தோப்புக்கரணம் தொடர்ந்து 3 நிமிடம் போடுவதால் நல்ல பலன்களை பெறலாம். இந்த 3 நிமிடம் தோப்புக்கரணம் போடுவது என்பது எளிதான விஷயம் ஆல்ல. பலரால் இதனை ஆரம்பத்தில் செய்ய முடியாது.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரித்து மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகிறது. மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுகிறது.

தோப்புகரணத்தில் காது நுனிகளில் தொடுவதன் காரணமாக, மூளையின் நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல், ஞாபக சக்தி, அதிகரிக்கிறது.

உடலின் மந்தமான மனநிலை நீங்கி, புதுவித ஊக்கமும் உற்சாகமும் கிடைக்கிறது. அதோடு உடலின் ஆற்றல் சக்தியும் அதிகரிக்கிறது.

தோப்புக்கரணம் செய்வதால், மூளைக்கு ரத்தோட்டம் சீராகி, மனதில் ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு நீங்கி, உடலின் கை, கால்களின் தசைகள் வலிமையாகும்.

தோப்புக்கரணம், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றி வந்தால், பெண்களின் பிரசவம் எளிதாகும். அதோடு அல்சைமர், ஆட்டிசம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

Related Articles

Back to top button
Close
Close