தெரிந்து கொள்வோம்!
இரத்தத்தில் உள்ள “குளுக்காஹான்” எனும் பொருளால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படுகிறது.
இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர் பிங்கலி வெங்கைய்யா
ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள் “இமய மலைத்தொடர்கள்” ஆகும்.
“பாபர்” முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் ஆவார்.
டெசிபல் என்பது “ஒலியின் அளவு” அளக்க உதவும் அலகு ஆகும்.
“1977”-ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க. தமிழ் நாட்டில் முதன்முதலில் ஆட்சிக்கு வந்தது.
“கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்” சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகிறது.
தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள் “அக்டோபர்-டிசம்பர்”
அதிகமாக உபயோகப்படும் பென்சிலினின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது “பூஞ்சை”
“துரோணாச்சாரியா விருது” வழங்கப்படுவது – விளையாட்டு பயிற்சியாளருக்கு.
இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள் “தமனி”
குருதியின் pH மதிப்பு – “7.3 – 7.5”
தேசிய கொடியின் நீள அகல விகிதாச்சாரம் – “3:2”
கங்கை சமவெளியில் காணப்படும் காடுகள் “சுந்தரவன காடுகள்”
இந்தியாவின் வாயில் என்று “மும்பை” துறைமுகம் அழைக்கப்படுகின்றது.
கங்கை கொண்டான் என்ற பெயர் கொண்ட சோழப் பேரரசர் “முதலாம் ராஜேந்திரன்”
உமிழ்நீரில் காணப்படும் என்சைம்(நொதி) “டயலின்”
தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் “அஸ்ஸாம்”
பருத்தி விளைவதற்கு ஏற்ற மண் “கரிசல் மண்”
தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம் “நாகப்பட்டினம்”
LCD என்பதன் விரிவாக்கம் “Liquid Crystal Display”