தெரிந்து கொள்வோம் !
தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் உள்ள ஊர் எது? ஸ்ரீவில்லிபுத்தூர்
காந்தியை மகாத்மா என்று முதன்முதலில் அழைத்தவர் யார்? ரவீந்தரநாத் தாகூர்
தொடு உணர்வு இல்லாத உள்ளுறுப்பு எது? மூளை
வியாழன் வளிமண்டலம் முழுவதும் எதனால் நிரப்பப்பட்டுள்ளது? ஹைட்ரஜன்
மனிதனின் வாழ்நாள் முழுவதும் வளரும் ஒரே உறுப்பு எது? காது
மகாகவி பாரதியார் மணிமண்டபம் எங்குள்ளது? எட்டயபுரம்
சுங்கம் தவிர்த்த சோழன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்? முதலாம் குலோத்துங்கன்
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் யார்? பாலகங்காதரத் திலகர்
ஐந்து நதிகள் பாயும் நிலம் எனப்படுவது எது? பஞ்சாப்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்? கர்ணம் மல்லேஸ்வரி
காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்? இரண்டாம் நரசிம்மவர்மர்
குரல்வளையை எப்படி அழைப்பார்கள்?ஆடம்ஸ் ஆப்பிள்
கேரளாவில் பயிர் அறுவடை நாள் என்ன பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது?ஓணம் பண்டிகையாக
தாஜ்மஹால்கட்டி முடிக்க எத்தனை வருடங்கள் ஆனது? 1632 முதல் 1648 வரை சுமார் 16 ஆண்டுகள் ஆயின
மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது எந்த ஆண்டில்? 1948ல்
எல்லோராவில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலைக் கட்டியவர் யார்? முதலாம் கிருஷ்ணர்
உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது? மே 31
குழந்தை பிறந்த எத்தனையாவது வாரத்தில் சிரிக்க ஆரம்பிக்கும்? 20வது வாரம்
கூர்மையான கண் பார்வை கொண்ட பறவை எது?கழுகு
தாஜ்மஹால் கட்டப் பயன்படுத்தப்பட்ட கற்கள் எவை? வெள்ளைநிறமுடைய பளிங்குக் கற்கள்
அறுவை சிகிச்சையின்போது பயன்படும் மயக்க மருந்து எது? குளோரோபார்ம்
இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி நிலையம் எது? கல்பாக்கம்