RETamil Newsதமிழ்நாடு
தி.மு.க.தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்தது; தொண்டர்கள் கண்ணீர் மல்க மகிழ்ச்சி !
தி.மு.க.தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவரை இறுதி அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு நம் தமிழக அரசு மறுப்புத்தெரிவிக்கவே நீதிமன்றத்தில் இரவோடு இரவாக வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்புதான் வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது , அதில் தி.மு.க.தலைவர் கருணாநிதியை இறுதி அடக்கம் செய்ய மெரினாவில் இடம் வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதை கேட்ட தொண்டர்களும் , குடும்பத்தினரும் கண்ணீர் மல்க மகிழ்ச்சி கொண்டனர்.