RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
தி.மு.க கட்சியில் தம்மை சேர்க்காவிட்டால் அதன் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்:மு.க.அழகிரி எச்சரிக்கை!

தி.மு.கவில் தம்மை சேர்க்கவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மு.க. அழகிரி, திமுக தொண்டர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமது தலைமையில் 5 ந்தேதி அமைதிப் பேரணி நடைபெறும்.
கலைஞர் உயிருடன் இருந்தபோது, தம்மை தி.மு.க சேர்த்துக் கொள்வதாக கூறியது, ஆனால் அதை சிலர் தடுத்துள்ளனர் எனவும் அழகிரி கூறினார்.
கருணாநிதி அவர்கள் உயிருடன் இல்லாததால் கட்சியை காப்பாற்ற களம் இறங்கியிருக்கிறோம். கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும்