திருவாடானை எம் எல் ஏ கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது- எழும்பூர் நீதிமன்றம்
கடந்த 16-ம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், தமிழக முதலமைச்சரையும், காவல்துறையையும் அவதூறாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கருணாஸை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். நடிகர் கருணாஸ் பேசியது குறித்து முழுமையான விசாரணை நடத்த 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.
ஆனால் எழும்பூர் நீதிமன்றம் கருணாஸுக்கு, 30 நாட்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல் போராட்ட வழக்கில் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதால் அந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்தால் தான் கருணாஸ் சிறையில் இருந்து வெளியே வர முடியும். ஐ.பி.எல் போராட்ட வழக்கில் கருணாஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.