fbpx
Others

அதிபர் டிரம்ப்–ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி extra…..

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: டொனால்ட் டிரம்ப் அரசியல் படுகுழியில் இருந்து மீண்டது எப்படி? - BBC News தமிழ்அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேஏற்கனவே மோதல் நீடிக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஈரான் மக்களுக்குவிடுதலைபெற்றுதரஅமெரிக்காதயாராகஇருக்கிறதுஎனகூறியுள்ளார்.போராட்டக்காரர்களைஒடுக்கினால்ஈரான்கடும்விளைவுகளைசந்திக்கநேரிடும்எனஅவர்எச்சரித்துள்ளார்.இதற்கிடையே ஈரான் அரசு போராட்டக்காரர்களை கடவுளின் எதிரிகள் என அறிவித்துள்ளது. அமெரிக்கா தான் இப்படி தூண்டிவிட்டு போராட்டங்களை நடக்க செய்வதாக சாடியுள்ளது. இது ஒருபுறம் இருக்க அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க தூதரகமும் ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் ஈரானுடன் வணிக கொண்ட நாடுகளுக்கு அமெரிக்கா 25% வரி விதிக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார். தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர் ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது எனதெரிவித்திருக்கிறார் . ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில்இருக்கிறது. .இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் தான் அதிகமாக ஈரானுடன் வணிகம் செய்கிறது. எனவே டிரம்பின் இந்த வரி விதிப்பு இந்த நாடுகளை தான் கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே இந்திய பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த 25 % வரியும் சேர்ந்தால் 75 % வரியாக உயரும்.இருந்தாலும் டிரம்பின் இந்த 25% வரி விதிப்பு எந்த வகையான சரக்குகள் அல்லது சேவைகளுக்கு பொருந்தும் என்ற விளக்கத்தை அமெரிக்க அரசு வெளியிடவில்லை. ஈரானுடன் வணிகம் புரியக்கூடிய ஐந்து பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் இருந்து பாஸ்மதி அரிசி, தேயிலை, சர்க்கரை,பழங்கள்,மருந்துபொருட்கள்,சர்பத்,கறி,பருப்புவகைகள்உள்ளிட்டவைஈரானுக்கு  ஏற்றுமதிசெய்யப்படுகிறது. அதே வேளையில் ஈரானிடம் இருந்து இந்தியா மெத்தனால், பெட்ரோலியம் பொருட்கள், ஆப்பிள், புரோபேன், காய்ந்த பேரிச்சம்பழம், ரசாயனங்கள், பாதாம் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்கிறது.2022-23 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையிலான மொத்த வர்த்தக மதிப்பு 2.3 பில்லியன் டாலர்கள் இது 2023 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக சரிய தொடங்கி விட்டது. இது தவிர சபாஹாரில் இருக்கும் துறைமுகத்தை மேம்படுத்தி பயன்படுத்துவது தொடர்பாக இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் இருக்கிறது. அமெரிக்க அரசு இந்த ஒப்பந்தத்தைதொடரஅனுமதிஅளித்திருந்தாலும் இந்த கூடுதல் வரி என்ற அறிவிப்புஇந்தியஏற்றுமதியாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close