திமுக கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து !!!
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலினை திமுக தலைவராக அறிவித்தார். இதையடுத்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பொதுச்செயலாளர் அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.
தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலைஞருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்க கோரி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனயடுத்து அண்ணா அறிவாலயம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தி.மு.க. தொண்டர்கள் கொண்டாடினர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அண்ணா மற்றும் கலைஞர் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
‘வெற்றிமேல் வெற்றி குவிக்க மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்’ – வை.கோ.
‘மு.க.ஸ்டாலினின் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்’ – கி. வீரமணி
‘அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள ஸ்டாலினுக்கு’ வாழ்த்துகள் – ராகுல்காந்தி
‘திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ – மம்தா பானர்ஜி
மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர்.