தலைமுடி உதிர்வதை தடுக்க மூலிகை எண்ணெய் !!
வீட்டிலிருந்தபடியே மூலிகை பொருட்களை கொண்டு எண்ணெய் தயாரிப்பது மிகவும் எளிதானதாகும். மூலிகை எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முடி உதிராமல் தடுக்கிறது. நரைமுடி வராமல் பாதுகாக்கிறது. தலையில் பொடுகு இருந்தால் அதனை குணமாக்குகிறது.
மூலிகை எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் -11/2 கப்
செம்பருத்தி இலை – 12-15
செம்பருத்தி பூ – 6
கறிவேப்பிலை – 1 கப்
கரிசிலாங்கனி இலை – 1/2 கப்
கீழாநெல்லி இலை – 1/2 கப்
தேங்காய் எண்ணெய் : இயற்கையாகவே கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
செம்பருத்தி இலை, பூ : தலைமுடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும். முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
கறிவேப்பிலை: முடி வளர்ச்சியை தூண்டும், நரைமுடி வராமல் தடுக்கும்.
கரிசிலாங்கனி இலை : கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும், பொடுகு வராமல் தடுக்கும்.
கீழாநெல்லி இலை: பொடுகு மற்றும் நரைமுடி வராமல் பாதுகாக்கும்.
செய்முறை:
மேற்கண்ட மூலிகை இலைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அனைத்தையும் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். பின்னர் தேங்காய் எண்ணெய் கூடிய பாத்திரத்தை மிதமான தீயில் அடுப்பினில் வைக்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கிளறவும். 5-10 நிமிடம் ஆனதும் பாத்திரத்தை இறக்கி ஆற வைக்கவும். பின்னர் இரவும் முழுவதும் அப்படியே இருக்க வேண்டும். காலையில் ஒரு மெல்லிய காட்டன் துணியில் வடிகட்டி ஒரு பாட்டிலில் மாற்றிக்கொள்ளவும். தயாரித்த மூலிகை எண்ணையை 5-6 மாதம் வரை வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்படி உபயோகிப்பது ?
தினமும் வழக்கமான கேசஎண்ணெயாக பயன்படுத்தலாம்.
இரவு படுப்பதற்கு முன் தலைமுடியில் மூலிகை எண்ணெய் தடவி கொண்டு காலை எழுந்ததும் கூந்தலை அலசலாம்.
வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்கலாம்.