RETamil Newsதமிழ்நாடு
தமிழக முதல்வர் அறிவிப்பு : கேரளாவுக்கு ரூ 5 கோடி நிதியுதவி
கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூபாய் 5 கோடி நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருவதால் , கேரளா , கர்நாடகா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காணப்படுகிறது.
கனமழை காரணமாக மலைப் பகுதியில் மண்சரிவு காணப்படுவதால் இதுவரை 3 பேர் பலியாகினர்.
மேலும் 12 பேர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவி செய்ய தமிழக அரசு தயார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .