தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் யார்?
தமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜனின் பதவிக்காலம் முடிகிறது. இதனை தொடர்ந்து அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்க போகிறார் என்பதில் போட்டி நிலவுகிறது. கட்சியின் மாநில பொது செயலர்களாக இருக்கும் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள், அடுத்த தலைவருக்கான பட்டியலில் உள்ளன. இதில் யாரை தேர்ந்தெடுக்கப்போவது என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
இரு முறை, தமிழக பா.ஜ.க தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் இருந்து விட்டதால், அவரையே தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் பதவியில் நீடிக்க வைக்க முடியாது. அதனால், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில், அகில இந்திய பா.ஜ.க தலைமை தீவிரமாகி இருக்கிறது.
இதில், வானதி சீனிவாசனுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இல.கணேசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் சிபாரிசு செய்து இருக்கின்றனர். மூவரில், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கே தலைவராகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக டில்லியில் இருந்து தகவல்கள் வருகின்றன.