fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

தன் மீது களங்கம் விளைவிக்க முயற்சி – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

பெண் ஒருவருடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகப் பரவியதையடுத்து, தன் மீது களங்கம் விளைவிக்க முயற்சி என ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

சமூக வலைதளங்களில் வெளியான சர்ச்சைக்குரிய ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

டி.ஜெயக்குமார் என்பவருக்கு மகன் பிறந்துள்ளதாக குழந்தை பிறப்பு சான்றிதழ் ஒன்றும், ஆடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த ஆடியோவில் உள்ள குரல் தனது குரல் அல்ல. அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் குறிப்பிட்டுள்ள டி. ஜெயக்குமார் தாம் அல்ல. மேலும் டி. ஜெயக்குமார் எனும் பெயர் கொண்டவர்கள் பலர் உண்டு. நான் மட்டும் இல்லை எனவும் தன் மீது களங்கம் விளைவிக்கவே இந்த முயற்சி எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close