டுவிட்டரில் ட்ரெண்டாகி வரும் ஹேஷ்டேக் ! “ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக”
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் வெள்ள நிவாரண பொருட்களில் , அதிமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து வருவதால் , “ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது.
100 ஆண்டுகளில் இல்லாத இயற்க்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. கன மழையாலும் பெரும் வெள்ளத்தாலும் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
2 கோடிக்கும் மேல் உள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முப்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அனைத்து உலக நாடுகளும் கேரளாவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.
ஆனால் தமிழகத்திலுருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் வெல்ல நிவாரண பொருட்களில் அதிமுகாவினர் ஜெயலலிதா , எம்.ஜி.ஆர் , பழனிச்சாமி ஆகியோர் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டி அட்டுழியம் செய்து வருகின்றனர்.
எப்போதும் அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புவது வழக்கம் தான் , ஆனால் அதிமுகவை சேர்ந்த சில தொண்டர்கள் தன்னல ஆர்வலர்கள் கொண்டு செல்லும் பொருட்களின் மீதும் விடாமல் ஸ்டிக்கர் ஒட்டி அலப்பறை செய்கின்றனர்.