செரிமானத்திற்கு சிறந்த சீரகம் !
‘சீரகம்’ இல்லாம நம்ம வீட்டு குழம்பு பதார்த்தம் எதுவுமே சமைக்கப்படுவதில்லை. அந்த அளவிற்கு சீரகம் நம் உணவுப்பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. சமையலில் சீரகத்தை சேர்த்துக்கொள்வது ருசிக்காக மட்டுமல்ல. அதில் உள்ள மருத்துவ குணத்திற்காகவே ஆகும்.
“அகத்தை(உடலின் உள்ளே ) சீர் செய்றதால அதுக்கு சீரகம்னு பெயர் வந்தது. சீரகத்திற்கு ‘போஜனகுடோரி, பித்தநாசினி’ என்ற வேறு பெயர்களும் உண்டு. (போஜனம் – உணவு/செரிமானம், குடோரி-மருந்து). அதாவது செரிமான மண்டலத்திற்கு இது சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. உடலில் பித்தத்தை சமநிலை படுத்தும் தன்மையும் சீரகத்திற்கு உண்டு.”
சீரகத்தை நாட்டுச் சக்கரையோடு சேர்த்து சாப்ப்பிடும்போது, தேக வன்மை கிடைக்கும்.
கற்கண்டு கூட கலந்து சாப்பிடும்போது இருமல் தீரும்.
சீரகப் பொடியோடு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், வயிறு எரிச்சல் குணமாகும்.
சீரகத்தை நல்லெண்ணெயில் போட்டு, காய்ச்சி சீரகம் ஒடியத்தக்க பதத்தில வடிச்செடுத்து தலைக்கு தேச்சு குளிச்சா கண்நோய், வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
மிளகு சீரகம் கொண்டு ரசம் வைத்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.