சென்னை காவல் துறை ; சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 ஆயிரம் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. அதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரயில் நிலையங்கள் , பஸ் நிலையங்கள் , முக்கிய பாலங்கள் என்று அனைத்து முக்கிய இடங்களிலும் சிறப்பு அதிரடி படையினறாலும் , வெடிகுண்டு நிபுணர்களாலும் சோதனை நடத்தப்பட்டுவருகின்றது.
இதன் அடிப்படையில் சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் , சிவகங்கை ரயில் நிலையம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது . இதை தொடர்ந்து முக்கிய பாலங்கள் , ரயில் தண்டவாளம் ஆகியவற்றிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் , பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் , பொதுமக்களின் உடமைகள் ஆகியவற்றையும் வெடிகுண்டு நிபுணர்கள் , மற்றும் மோப்ப நாய் போன்றவற்றின் உதவி கொண்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சென்னை காவல் அதிகாரி கூறியது;
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமை செயலகத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பணியில் 2000 போலீசார் உள்ளனர்.
அனைத்து ரயில் நிலையங்கள் , பஸ் நிலையங்கள் , முக்கிய பாலங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணி அதிகரித்துள்ளது.எனவே இதுவரை எந்தவித தீவிரவாத அச்சுறுத்தலும் வரவில்லை என்று கூறினார்.