சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து எச்.ராஜா மீது வழக்குப்பதிவு !
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் தடைவிதித்தனர். அவர்களுடன் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர்நீதிமன்றத்தையும், காவலர்களையும் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
எச். ராஜாவின் இந்த செயலை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். உயர் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், நேரில் ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்கவேண்டும் என்று ஹெச். ராஜா விற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.