சுவையான பூண்டு குழம்பு …
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் 1/4 கிகி
தக்காளி 2 நறுக்கினது
பூண்டு 15 பல்
நல்லெண்ணெய் 100 மி.லி
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
கடுகு 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
சீரகம், வெந்தயம் 1/2 ஸ்பூன்
புளிக்கரைசல்
மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
தண்ணீர்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விடவும். அதில் பூண்டினை சேர்த்து வேகவிடவும்.10-15 நிமிடம் வேக விட்டு இறக்கிவிடவும். வேகவைத்த பூண்டினை மத்தினை கொண்டு நசுக்கி வைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளிக்க வேண்டும்.
நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். கறிவேப்பிலை, போடவும். அதன் பின் தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கிக்கொள்ளவும்.
புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், புளிக்கரைசல், உப்பு அனைத்தையும் கரைத்து வைத்து கொண்டு காரம், உப்பு, புளிப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்த பின் அதனுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் மிளகாய் வெடி வாசனை போனதும் அதனுடன் வேக வைத்துள்ள பூண்டை சேர்த்து விட வேண்டும். நன்றாக கொதித்ததும் குழம்பு கரண்டியில் ஒட்டும் பதம் வந்ததும் சிறிய தீயில் 10 நிமிடம் வையுங்கள். எண்ணெய் நன்றாக மிதந்து வரும் நிலையில் இறக்கி விடவும்.
சுவையான, ஆரோக்கியமான பூண்டு குழம்பு தயார். இதனுடன் அப்பளம் ஒன்றே போதும். ருசியானதாக இருக்கும். வாரத்திற்கு ஒரு நாள் இந்த பூண்டு குழம்பு சமைத்து சாப்பிடுவதால் உடம்பில் உள்ள அதிகப்படியான வாயுவை குறைக்கும் ஆற்றல் உடையது.