சுவையான சத்தான முட்டை சாதம் !!!

தேவையான பொருட்கள்:
சாதம் – 1 கப்
முட்டை-3
கடுகு 1ஸ்பூன்
சீரகம் 1ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
வெங்காயம் 1 பெரியது
கறிவேப்பிலை
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றவும். பின்னர் கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். கடுகு மற்றும் சீரகம் பொரிந்ததும் அதனுடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும். கிளறும்போது மிளகு தூள் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கிளறவும். முட்டை நன்றாக வெந்ததும் அதனுடன் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும். சாதமும் முட்டையும் நன்றாக சேரும் வரை நன்றாக கிளறவும். 5-10 நிமிடம் ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
சுவையான மிகவும் சத்து நிறைந்த முட்டை சாதம் தயார். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். மத்திய வேலை உணவாக இதனை கொடுக்கலாம். முட்டையில் புரத சத்து அதிகம் உள்ளது. எனவே குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு முட்டை சாதம் முக்கிய பங்கினை வகிக்கும்.