சுவையான கிச்சடி செய்வது எப்படி !!

தேவையான பொருட்கள்:
ரவை வறுத்தது 1/4 கிலோ
வெங்காயம் 2
தக்காளி 1
பச்சை மிளகாய் 3
காரட் 1
பீன்ஸ் 5
பச்சை பட்டாணி 1 கைப்பிடி
புதினா 1 கைப்பிடி
கடுகு, உளுந்து 1ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
பூண்டு 10 பல் நறுக்கியது
இஞ்சி பேஸ்ட் 1ஸ்பூன்
பட்டை, இலை
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் அதில் ரவையை இட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும். பின்னர் ரவையை எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலையை முதலில் போடவும். பின்னர் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும்.
நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி கொள்ளவும். பின்னர் பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.அதன் பின் தக்காளி சேர்க்கவும்.
காரட், பீன்ஸ், பட்ட்டணி, புதினா இலை சேர்த்து வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு, வெறும் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். ரவையை அளந்து வைத்த டம்ளரில் தண்ணீர் இரண்டரை மடங்காக சேர்த்து காய் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும்.
காய் வெந்த பிறகு ரவையை கொட்டி கிளறவும். மிதமான தீயில் நன்றாக கிளற வேண்டும். இல்லையென்றால் உண்டலும் உடைச்சலுமாக இருக்கும். தட்டினை கொண்டு மூடி வையுங்கள், 10 நிமிடம் ஆனதும் இறக்கி பரிமாறவும்.
சுவையான கிச்சடி தயார். இதற்கு தேங்காய், உடைத்த கடலை சட்னி நன்றாக இருக்கும்.