சுவையான இறால் முட்டை பொடிமாஸ் !
தேவையான பொருட்கள்:
இறால் 1/2 கிலோ
முட்டை 3
சீரகம் 1 டீஸ்பூன்
கடுகு, உளுந்து 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
மிளகுத்தூள் 1 டீஸ்பூன்
வெங்காயம் 2
தக்காளி 1
கறிவேப்பிலை
கொத்துமல்லி
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
செய்முறை:
இறாலை தோல் மற்றும் அதனுள் இருக்கும் குடலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு 3 தடவைக்கு மேல் தண்ணீர் கொண்டு கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து கொள்ளவும். அது பொரிந்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக மாறியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்க்கவும். பின் சுத்தம் செய்யப்பட்ட இறாலை சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து கிளறவும். ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி விடவும். நன்றாக கொதிக்க விடவும். இறால் 10-15 நிமிடம் வேக வேண்டும். மசாலா சுண்டியதும் அதனுள் முட்டைகளை உடைத்து ஊற்றவும். முட்டையுடன் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். முட்டை இறால் சேர்ந்த மசாலாவை 2 அல்லது 3 முறை பிரட்டி எடுக்கவும். கொத்துமல்லி தழையை போட்டு இறக்கவும். சுவையான இறால் முட்டை பொடிமாஸ் தயார்.