சருமத்தை பராமரிக்கவும் பாதுகாக்கவும் கடலைமாவு !!!
கடலைமாவு சருமத்தை பராமரிக்கவும், பொலிவடையவும் செய்யும். முகத்தில் உள்ள அழுக்கினையும், இறந்த செல்களையும் நீக்கி புத்துயிர் பெற செய்யும்.
கடலைமாவு காற்று மாசுக்களால் ஏற்படும் கறைகளை அகற்ற கடலை மாவு சிறந்ததாக உள்ளது.
அழகு குறிப்பு 1:
கடலை மாவு 2 ஸ்பூன்
வெள்ளரி சாறு தேவையான அளவு
இரண்டையும் சேர்த்து முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.
இதனால் முகம் பொலிவடையும்.
அழகு குறிப்பு 2:
கடலை மாவு 2 ஸ்பூன்
பாதாம் பவுடர் 1 ஸ்பூன்
எலுமிச்சம் சாறு 2 ஸ்பூன்
இம்மூன்றையும் சேர்த்து முகத்தில் தடவிக்கொள்ளவும். 30 நிமிடம் ஊற வைத்த பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விடவும். இதனை வாரத்தில் ஒரு நாள் என தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பிரகாசம் பெரும். ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.
அழகு குறிப்பு 3:
கடலை மாவு
சந்தனம்
பன்னீர்
தேன்
இவற்றினை நன்றாக குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்த பின்னர் கழுவி விடவும்.
இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி சருமம் மென்மை பெரும்.