RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
சமையல் சிலிண்டர் விலை இன்று முதல் உயர்வு :பொது மக்கள் அதிர்ச்சி!
மானியம் இல்லாத சமையல் எரிவாயு விலை ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மானிய விலை எரிவாயு சிலிண்டரின் விலை 2 ரூபாய் 89 காசுகளாக அதிகரித்துள்ளது. விலை உயர்த்தப்பட்டிருப்பதால், மானியம் பெறும் பயனாளிகளுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை 376 ரூபாய் 60 காசுகளாக உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம் வரை இந்த மானியத் தொகை 320 ரூபாய் 49 காசுகளாக இருந்தது.