கொண்டைக்கடலையின் பயன்கள்!
கொண்டைக்கடலை புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஃபைபர் ஆகியவற்றுக்கு நல்ல ஆதாரமாக இருக்கின்றன.
இரவு படுக்க போகும் முன் நல்ல தண்ணீரில் ஊறவைக்கவும். 8-10 மணிநேரம் நன்றாக ஊற வேண்டும். பின்னர் குக்கரில் கொண்டைக்கடலையை சேர்த்து 5-6 விசில் கொடுத்து வேக வைத்து கொள்ள வேண்டும். இதனை கர்ப்பிணி பெண்கள் வாரத்திற்கு இருமுறை உண்பதால் வயிற்றில் வளரும் சிசு நல்ல ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எடை கூடும்.
பெண்கள் தொடர்ந்து கொண்டக்கடலை உணவில் எடுத்துக்கொள்வதால் உடல் வலுவடையும். சோர்வின்றி சுறுசுறுப்புடன் காணப்படலாம். கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, கை கால் வலி வராமல் தடுக்கும்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ்-க்கு கொண்டைக்கடலை வாரத்திற்கு ஒருமுறை கொடுக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எலும்பினை உறுதியாக்கும். புரோட்டீன் நிறைந்திருப்பதால் உடலின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் மெலிந்த உடலை குண்டாக்கும். மூக்கடலையில் “கோலைன்” காணப்படுவதால் மூளை வளர்ச்சியை அதிகமாக்கும், புத்தி கூர்மையுடன் இருக்கவும் இது உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. இதில் அதிகளவில் நார்சத்து இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
எலும்பு ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.இதில் இரும்பு சத்து, பாஸ்பேட், கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், மற்றும் வைட்டமின்- கே காணப்படுவதால் உடலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
இரத்த அழுத்தம் சீராக்க மூக்கடலை உதவுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு மூக்கடலை சிறந்த உணவாகும். இதய ஆரோக்கியத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஆன்டி ஆக்சஸிடன்ட், உயர் ஃபைபர், பொட்டாசியம், வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் பி -6 மூக்கடலையில் அதிகளவு காணப்படுகிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவினை குறைக்க உதவுகிறது, இதையொட்டி இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
கனிம செலினியம் மூக்கடலையில் காணப்படுவதால் கேன்சர் செல்களின் உற்பத்தியை தடுக்கிறது.