fbpx
Others

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி – சிறப்பு செய்தி

Surulivel RedCrosd K: Greetings from Indian Red Cross Society,
Theni district.வணக்கம்.தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா சேவைகளில் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளார்கள்.இதன் துவக்க நிகழ்வு இன்று(06.05.2025) காலை 10 மணி அளவில் வீரபாண்டியில் நடைபெற்றது.ரெட் கிராஸ் சேர்மன் திரு என்.ஆர்.டி. ஆர்.தியாகராஜன் அவர்கள் தலைமையிலும் துணைத் தலைவர் திரு.வி.மகாராஜன் அவர்கள் முன்னிலையிலும், அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பங்கேற்பிலும் நடைபெற்ற இந்நிகழ்வில்
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவ பிரசாத், இ.கா.ப., அவர்கள் ரெட்கிராஸ் கொடியசைத்து சேவையைத் துவக்கிவைத்தார்.திரு.வி.பி. அழகேந்திரன் ஒருங்கிணைப்பில் 65 தன்னார்வலர்கள் திருவிழா சேவை பணிகளில் ஈடுபடுகின்றனர்.அவர்கள் அனைவருக்கும் ரெட் கிராஸ் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி.[5/6, 6:29 PM] Surulivel RedCrosd K: சேவை பணியில் ஈடுபடும் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் அனைவருக்கும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் உள்ளன்போடு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்

 

 

Related Articles

Back to top button
Close
Close