RETamil Newsதமிழ்நாடு
கலைஞரின் இறப்பு சான்றிதழ் தயாளு அம்மாளிடம் வழங்கியது :சென்னை மாநகராட்சி
தி. மு.க தலைவரான கருணாநிதி தன் 94 ம் வயதில் ஆகஸ்ட் 7 ம் தேதி மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் மறைந்ததை அடுத்து நேற்று அவரது உடல் அண்ணா சமாதிக்கு வலது புறத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தி. மு. க தொண்டர்கள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் கலைஞரின் இறுதி பயணத்தில் பங்கேற்றனர்.
இரண்டாவது நாளான இன்றும் அவருக்கு அஞ்சலி செலுத்த மக்கள் மெரீனாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஓயாமல் உழைத்தவன் ஒய்வு கொண்டிருக்கின்றான் என்னும் வசனத்தை கலைஞரின் சந்தன பேழையில் பொறிக்கப்பட்டிருந்தன.
நீங்காது மக்கள் மனதில் இடம்பெற்ற கலைஞரின் இறப்பு சான்றிதழ் அவரது மனைவி தயாளு அம்மாளிடம் சென்னை மாநகராட்சி இன்று ஒப்படைத்தது.