கறிவேப்பிலை எண்ணெய்யின் பயன்கள் மற்றும் செய்முறை!

தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
தேங்காய் எண்ணெய் 200 மி.லி
வெந்தயம் 1 ஸ்பூன்
செய்முறை:
கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் எடுத்துக்கொண்டு மிதமான தீயில் வதக்கவும்.
கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் பொரிந்ததும் ஒரு தட்டில் இட்டு ஆறவிடவும்.
நன்றாக தூளாகும் வரை அரைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனுடன் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு இறக்கி வைத்து ஆற விடவும்.
இதனை வடிகட்டி ஒரு டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்தவும்.
பயன்படுத்தும் முறை:
தேவையான அளவு எண்ணையை கையில் எடுத்து கொள்ளவும். அதனை தலையில் வேர்ப்பகுதி வரை பரவும்படி நன்றாக தேய்த்து 10-15 நிமிடம் வரை மசாஜ் செய்யவும். பின்னர் 10 நிமிடம் தலையில் ஊற வைத்து, கூந்தலை அலசவும். தலைமுடியை அலசுவதற்கு எளிமையான ஷாம்பூவை பயன்படுத்தவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை கறிவேப்பிலை எண்ணையை பயன்படுத்த வேண்டும். இதனை தொடர்ந்து 30 நாட்களுக்கு பயன்படுத்தி சிறப்பான பலனை பெறலாம்.
கறிவேப்பிலை எண்ணையின் பலன்:
கறிவேப்பிலையில் வைட்டமின் பி இருப்பதால் இளம் வயதிலேயே ஏற்படும் நரை முடியை வராமல் தடுக்கும்.
பீட்டா கரோட்டின், ப்ரோடீன்ஸ் அதிகளவு இருப்பதால் கூந்தலுக்கு வலிமையை கொடுக்கும். தலைமுடியில் ஏற்படும் வெடிப்புக்களை குறைத்து நீண்ட அழகான தலைமுடியை கொடுக்கும். முதிர்ந்த வயதிலும் இளமையான தோற்றத்தை பெறலாம்.