fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

கருணாஸ் பேச்சு குறித்து ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்?:அமைச்சர் ஜெயக்குமார்

கருணாஸ் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “ஊழல் குறித்து பேச திமுக, காங்கிரசுக்கு தகுதி இல்லை. ஊழல் சாம்ராஜ்யத்தின் தலைமையிடமே திமுக தான், ஆனால் தற்போது ஊழல் குறித்து அவர்கள் நியாயம் பேசி வருகின்றனர். காங்கிரஸ் – திமுக கூட்டணியில் இருந்தபோது தான் நிலக்கரி சுரங்க ஊழல் உள்ளிட்ட அனைத்தும் நடைப்பெற்றுள்ளது. திமுக கட்சியினரே எல்லாம் செய்துவிட்டு தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. ஸ்டாலின் அதனை கண்டிக்காதது ஏன்?. திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது. ஸ்டாலின் எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திப்போம்.

இதனையடுத்து கருணாஸின் சர்ச்சைக்குறிய பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, என்னை அரிச்சந்திரன் என கூறிய கருணாஸுக்கு நன்றி. சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர் அமைச்சர் ஜெயக்குமார்.

ஸ்டெர்லைட் குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close