முன்னாள் ஐ.நா. சபை தலைவர் மற்றும் நோபல் அமைதிக்கான பரிசு பெற்றவருமான கோஃபி அன்னான். இவர் இன்று காலமானார்.
அவருக்கு வயது 80. நோய்வாய்பட்டு இருந்த கோஃபி அன்னான் மறைவு செய்தியை கோஃபி அன்னான் அறக்கட்டளை அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அன்னான் உலகின் தூதராக பதவி வகித்த முதல் கருப்பு ஆபிரிக்கர் ஆவார்.
இவர் 1997ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை 2 முறை ஐ.நா சபையில் பணியாற்றினார். பின்னர் ஐ.நா. சிறப்பு தூதராக பணியாற்றினார்.
சிரியாவுக்கு ஐ.நா வின் சிறப்பு தூதராக பணியாற்றினார். 2001ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கோபி அன்னானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .