எங்கள் வீட்டில் நடந்தது வருமானவரித்துறை சோதனை அல்ல – விஜய் சேதுபதி
எங்கள் வீட்டில் நடந்தது வருமானவரித்துறை சோதனை அல்ல, ஜி.எஸ்.டி வரி கட்டுவது குறித்த ஆய்வு மட்டுமே என்று நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் செக்கச் சிவந்த வானம் வெளியானது. ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் சேதுபதி லக்னோ சென்றிருந்த நேரத்தில் வரிமான வரித்துறையினர், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
சென்னையில் நடைபெற்ற சினிமா விழாவின் போது செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, வருமான வரித்துறை அதிகாரிகள் தமது வீட்டிற்கு வந்தது உண்மைதான் என்றார். ஆனால் வருமான வரிசோதனை நடைபெறவில்லை என்ற அவர், ஜி.எஸ்.டி வரி கட்டுவது குறித்து ஆய்வுக்காக அதிகாரிகள் வந்தனர் என்றார்.
வரி விவரங்களை பார்த்துக்கொண்ட ஆடிட்டரால் சின்ன குழப்பம் ஏற்பட்டதாகவும் குழப்பத்தை போக்கிக்கொள்ள வருமான வரித்துறையினர் வந்தனர் என்றும் குழப்பம் தீர்ந்ததால் சென்றுவிட்டனர் என்றும் அவர் கூறினார். வரிகளை சரியாக செலுத்தி வருவதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.
தற்போது நம்ம ஊருல ட்ரெண்டிங் இருக்கு. சிலர் எதாவது கருத்து சொல்லி விட்டு நான் சொல்லவில்லை எனது அட்மின் சொல்லியதாக சொல்வாங்க. அதுபோல் ‘என் வீடு மாதிரி செட் போட்டு ஆய்வு செய்திருக்காங்க’ என்று கூறினார்.