உங்கள் கழுத்து பகுதியில் உள்ள கருமை நிறம் மறைய வேண்டுமா?
ஒவ்வொரு நாளும் முகத்தை பராமரிக்கும் நாம், கழுத்தைச் சுற்றி சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அப்பகுதி சிலருக்கு மிகவும் கருமையாக இருக்கும். மேலும் இப்பகுதியில் அதிகமாக வியர்ப்பதால், தூசிகள், இறந்த செல்கள் போன்றவை அப்படியே படிந்து கருமையான படலமாகின்றன. இதனைத் தவிர்க்க தினமும் போதிய பராமரிப்புக்களை கழுத்திற்கும் கொடுக்க வேண்டும். இங்கு கழுத்தில் உள்ள கருமையைப் போக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எலுமிச்சை ப்ளீச்: 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 டீஸ்பூன் ரோஜ் வாட்டர் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை மறைவதைக் காணலாம்.
வெள்ளரிக்காயை துருவி, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவும் முன் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் கழுத்தில் உள்ள கருமை மறையும்.
பப்பாளி காயை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறைவதைக் காணலாம்