இரண்டே நாட்களில் முகம் பொலிவடைய…..
நீங்கள் சருமத்தை எவ்வளவு தான் பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தாலும் சூரியஒளி முகத்தில் நேரடியாகப் படும்போது, முகத்தில் கருமை நிறம் படியத் தொடங்கிவிடுகிறது. அப்படிப்பட்ட சருமத்தை இரண்டே நாட்களில் எப்படி சரிசெய்யலாம்?
இப்போதெல்லாம் பெண்களை விடவும் ஆண்கள் சருமப் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
இதுபோன்ற சருமத்தை இரண்டே நாட்களில் சரிசெய்ய இயற்கைப் பொருட்களால் மட்டுமே முடியும்.
பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பின் முகத்தைக் கழுவினால் முகத்தில் உள்ள மாசுக்கள் நீங்குவதோடு, கருந்திட்டுகள் குறைய ஆரம்பிக்கும்.
கற்றாழை ஜெல்லைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால் முகம் பளிச்சென மாறும்.
வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனுடன் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவுங்கள்.
மாம்பழத்தோலை சில துளிகள் பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவ, சூரிய வெப்பத்தால் கருமையாக மாறிய சருமம் பளிச்சென மாறும்.