RETamil Newsதமிழ்நாடு
இன்று ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர், முதல்வர் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , முதல்வர் பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் செப்.5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு தலைசிறந்த ஆண் மற்றும் பெண் குணாதிசயங்கள் நிறைந்த மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்கள் அளிக்கும் சிறந்த கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதல் மூலம் தான் இந்த நாட்டிற்கு கிடைக்கின்றன.
சமுதாயத்தில் முக்கிய பெரும் பங்கினை அளித்து வரும் ஆசிரியர்களுக்கு இந்த தினத்தில் நமது மரியாதையும், மதிப்பையும் அழித்திடுவோம் என்று கூறி ஆளுநர் தனது ஆசிரியர் தின வாழ்த்தை தெரிவித்தார்.