fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

எடப்பாடி அறிவித்த ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதி அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

தற்போது ஏழைமக்கள் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை தடை செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை சட்டப்பஞ்சாயத்து அமைப்பை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அதில் 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், இவ்வாறு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளார்.

எனவே இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close