‘ஆயுஷ்மான் பாரத் ‘ என்ற காப்பீட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார் மோடி; 24 மணி நேரத்தில் 1000 பேர் பயனடைந்துள்ளனர்.
‘ஆயுஷ்மான் பாரத் ‘ என்ற தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கிவைத்தார். அவர் துவங்கிவைத்த 24 மணி நேரத்தில் 1000 பேர் பயனைடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள சுமார் 10 கோடி ஏழை குடும்ப மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெரும் வகையில் கடந்த 23-ஆம் தேதி பிரதமர் மோடியால் இந்த ‘ஆயுஷ்மான் பாரத் ‘ என்ற தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோளே ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மக்கள் இலவச மருத்துவ வசதி பெறுவதாகும். அதனால் தான் இந்த திட்டத்திற்கு ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் 11 வகைகளாக இவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த 11 வகைகளில் பிட்சை எடுப்போர், துப்புரவு தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், சித்தாள்கள், கூலித்தொழிலாளர்கள், வீதி வீதியாக சென்று பொருட்களை விற்பவர்கள், கட்டுமான பணி செய்பவர்கள், பெயிண்டர்கள் , தினக்கூலி செய்பவர்கள் ஆகியோர் இந்த தில்லத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர்.
‘ஆயுஷ்மான் பாரத் ‘ என்ற காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்த 24 மணி நேரத்தில் 1000 பேர் பயனடைந்துள்ளனர். சத்தீஸ்கர், ஜார்கண்ட் , ஹரியானா , அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.