Tamil Newsவிளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 7-வது தங்கம் வென்றது!
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் சிங் தூர் தங்கம் வென்று இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த போட்டியில் சீன வீரர் லியு யங், கஜகஸ்தான் வீரர் இவான் இவனோவ் முறையே வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.
இந்தப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தஜிந்தர் சிங் தூரின் வயது 23, தனது முதல் முயற்சியிலேயே 20.75 மீட்டர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரில் இந்தியாவிற்கு இது 7-வது தங்கமாகும். இந்தியா 7 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கல பதக்கங்களை வென்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் 8- வது இடத்தை பெற்றுள்ளது. மேலும் சீனா 72 தங்கப்பதக்கங்களுடன் முதல் இடத்தில் தொடர்கிறது.