அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் !
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுடன் மா.பா. பாண்டியராஜன், செல்லூர் ராஜூ, அன்பழகன், வளர்மதி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
செப்.30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாநிலங்களில் அதிமுக புதிய உறுப்பினர்களின் சேர்க்கைகளை தீவிரப்படுத்துவது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகள் தொடர்பான ஆலோசனையும் இந்த கூட்டத்தில் நடைபெறும் என தெரிகிறது. அத்துடன் மேலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.