fbpx
HealthTamil News

அற்புத மருத்துவ குணம் கொண்ட சுக்கு !

இஞ்சி காஞ்சி போனா..அதுதான் சுக்கு.

தொண்டைகட்டு, குரல்கம்மல், காதடைப்பு, கபம் இப்படி பல நோய்க்கு சுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது. அஜீரணம், வயிற்று பொருமல், வாய்வு தொல்லைகளுக்கு சுக்கு பானம்(சுக்கு காபி) சிறந்த மருந்து. பசி உண்டாகாமல் இருப்பவர்க்கு பசி உண்டாக்க சுக்குப்பொடியை 3 விரலளவு எடுத்து அப்போது கறந்த பாலில் கலந்து கொடுத்து வரணும்.

பிள்ளைபெற்ற தாய்க்கு கருப்பை இயல்புநிலை அடைய, பால்சுரப்பு தூண்ட, சுக்கும் சில மருத்துவப் பொருட்களும் சேர்த்து செய்யப்பட்ட ‘சௌபாக்கிய சுண்டி லேகியம்’ நல்ல பலன் தரும்.

தொண்டைகட்டு மற்றும் குரல்கம்மல்: சுக்கை மென்று சாற்றை மட்டும் விழுங்க வேண்டும். சுக்கு, மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து தொண்டையில் பூசி (வெளிப்புறமாக) வரலாம்.

இருமலுக்கு: சுக்கு மற்றும் அதிமதுரத்தை பொடி செய்து 1கிராம் அளவுகு தேனில் குழைத்துண்ணலாம்.

காதடைப்பு மற்றும் கபம்: சிறு துண்டு சுக்கை சிதைத்து, துணியில் கட்டி காதினுள் வைத்தல்.

பூரான்-தேள் கடி விஷம் முறிக்க: சுக்கு சிறு துண்டு, மிளகு 10, வெற்றிலை 1 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சுக்குப்பற்று நெற்றியிலிட, தலைவலி தீரும்.
சுக்குப்பற்று கழுத்தின் மீதிட, தொண்டை வலி தீரும்.
சுக்குப்பற்று புருவத்தின் மீதிட, அண்மைப் பார்வைக்குறை நீங்கும்.
சுக்குப்பற்று மூட்டின் மீதிட, மூட்டு வலி, வீக்கம் மறையும்.

Related Articles

Back to top button
Close
Close